நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனியார் பாலர் பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவர்களுக்கு மித்ராவின் கீழ் 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது: பிரபாகரன்

புத்ரா ஜெயா:

அறிவு மிக்க குழந்தை, சிறப்பான நாடு திட்டத்தின் கீழ் தனியார் பாலர் பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவர்களுக்கு மித்ரா 10 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி உள்ளது.

மித்ரா தலைவர் பிரபாகரன் இதனை அறிவித்தார். 

மித்ராவில் 10 மில்லியன் நிதியை, பி40 குடும்பத்தைச் சேர்ந்த 5,000 பாலர் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கியுள்ளது.

இது 2025 ஆம் ஆண்டிற்கான தனியார் பாலர் பள்ளி ஆரம்பக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த திட்டம பி40 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கான தரமான கல்வியை உறுதி செய்யும் வகையில் அரசாங்கத்தின் மலேசியக் கல்வி மேம்பாட்டு திட்டம் 2013-2025-க்கு ஏற்ப செயல்படுத்தப் படுகிறது.

மித்ரா தனியார் முன்பள்ளி நிர்வாகிகளிடமிருந்து மொத்தம் 178 விண்ணப்பங்களை பெற்றது.

பரிசீலனைக்கு பின், 173 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதன் மூலம் 4,025 பாலர் பள்ளி குழந்தைகள் நன்மை அடைகின்றனர்,

மொத்த நிதி ஒதுக்கீடு 7,750,575.00 ரிங்கிட்டாகும். இந்த உதவித்தொகை, தகுதி வாய்ந்த தனியார் முன்பள்ளிகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்ட பின் ஒருமுறை கட்டணமாக வழங்கப்படும்.

தகவலுக்காக, தகுதியான பாலர் பள்ளி மற்றும் குழந்தைகளின் பெயர் பட்டியலை 2025 செப்டம்பர் 8 முதல் மித்ரா அகப்பக்கத்தில் பார்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, தனியார் பாலர் பள்ளி ஆரம்பக் கல்வி உதவித் தொகை திட்டம் 2025 குறித்து கேள்விகள் இருந்தால், வேலை நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை 03-8892 3442 என்ற எண்களில் மித்ராவைத் தொடர்புகொள்ளலாம் அல்லது spl@mitra.gov.my
 என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம் என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset