
செய்திகள் மலேசியா
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் கூறினார்.
கேரளாவின் பாரம்பரிய சிறப்புமிக்க ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து மலையாள சமூகத்தினருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள்.
மலையாள மக்களின் அறுவடைத் திருவிழா என்றும் அழைக்கப்படும் ஓணம், மலேசியாவில் பெருமளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
இயற்கை வளம், விவசாயம், உடல் உழைப்பு, வளமான வாழ்க்கைக்கு நன்றி செலுத்துதல், சமூக ஒற்றுமை என நல்ல எண்ணங்களையும், நலமிக்க செயல்களையும் சிறியோர் பெரியோரிடையே விதைக்கும் முக்கிய பங்காக ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் விளங்குகிறது.
வாசலில் கோலமிட்டு, வீட்டை அலங்கரித்து, விதவிதமாக உணவு சமைத்து நண்பர்கள், உறவினர்களை அழைத்து விருந்து வைத்து கொண்டாடப்படும் இந்த பண்டிகை மலேசியர்களின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் திருநாளாகவும் விளங்குகிறது. குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணம் இது.
வெவ்வேறு கலாச்சாரமும், பழக்க வழக்கமும் நம் வாழ்க்கையை இன்னும் வண்ணமயமாக்குகிறது என்றால் அது மிகையாகாது.
தொடர்ச்சியான கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியான தருணங்களும் இருந்து கொண்டே இருக்கும்.
மீண்டும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் வாழ்க்கை அமைதியும், ஆனந்தமும் நிறைந்த வளமான வாழ்க்கையாக இருக்க மனமார்ந்த வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 10:33 pm
கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்
September 4, 2025, 10:30 pm
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஓணம் பண்டிகை வாழ்த்து
September 4, 2025, 10:28 pm
ஷாரா குதித்திருக்கலாம் அல்லது விழுந்திருக்கலாம்: நிபுணர்
September 4, 2025, 6:47 pm
முன்னாள் ஏஜிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் அனுமதி பெறத் தவறிவிட்டார்
September 4, 2025, 6:45 pm
தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி
September 4, 2025, 6:43 pm
சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி
September 4, 2025, 6:41 pm
சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி: பிரபாகரன்
September 4, 2025, 6:39 pm