நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

தளத்தின் உள்ளடக்க மதிப்பீட்டாளர்கள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகளை டிக் டாக் தீர்க்க வேண்டும்.

அப்படி  தீர்க்கத் தவறியதற்காக டிக்டாக் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

நாங்கள் முன்னர் எழுப்பிய சில பிரச்சினைகளைத் தீர்க்க பல நடவடிக்கைகளை எடுப்பதில் டிக் டாக் தீவிரம் காட்டாததால் நான் பொதுவாக மிகவும் ஏமாற்றமடைகிறேன்.

டிக் டாக்கின் உயர் நிர்வாகத்துடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

டிக டாக்மில் செல்வாக்கு மிக்கவரான ஈஷா என்று அழைக்கப்படும் ராஜேஸ்வரி, இணைய பகடிவதைக்கு ஆளானதையும் ஃபஹ்மி மேற்கோள் காட்டினார்.

இன்றைய கூட்டத்தில், அவர்கள் கண்காணிக்கச் சேர்த்த மதிப்பீட்டாளர்களின் எண்ணிக்கையை வெளியிடத் தவறிவிட்டனர்.

மேலும் தமிழில் டிக் டாக் லைவ் உட்பட உள்ளடக்கத்தைப் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்.

எங்களுக்கு எண்களைக் கொடுக்குமாறு நாங்கள் அவர்களிடம் பலமுறை கேட்டுள்ளோம்.

ஆனால் அவர்கள் பலமுறை தோல்வியடைந்துள்ளனர். இது மிகவும் தீவிரமான விஷயமாகும்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறினால் டிக் டோக் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.

மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதை ஆராய்வதை நான் எம்சிஎம்சியிடம் விட்டு விடுகிறேன் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset