நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்

கோல குபு பாரு:

கம்போங் ஓராங் அஸ்லி பெர்த்தாக்கில் ஆற்றின் நீர் பெருக்கத்தில் சிக்கிய 12 போலிஸ் அதிகாரிகள் உட்பட 22 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.

இன்று மதியம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது பெய்த கனமழையைத் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை தொடர்ந்து இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து தனது துறைக்கு மாலை 6.42 மணிக்கு அவசர அழைப்பு வந்ததது.

கோலா குபு பாரு தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஒரு தீயணைப்பு மீட்பு குழு, ஒரு ஹிலக்ஸ் பயன்பாட்டு வாகனம் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தன.

இது நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அவர்கள் இரவு 7.07 மணிக்கு அந்த இடத்தை வந்தடைந்துடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset