நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுலின் மரணத்திற்கான காரணத்தை இரண்டாவது பிரேத பரிசோதனை முடிவுகள் நிர்ணயிக்கும்: காலிட் நோர்டின்

செர்டாங்:

சம்சுல் ஹரிசின் மரணத்திற்கான காரணத்தை இரண்டாவது பிரேத பரிசோதனை முடிவுகள் நிர்ணயிக்கும்.

தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் இதனை கூறினார்.

ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை பயிற்சியாளரான மறைந்த சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடின் திடீரென மரணமடைந்தார்.

இந்நிலையில் சம்சுல் ஹரிசின் உடலில் இரண்டாவது பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இச்சோதனை முடிவுகள் சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடினின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை தீர்மானிக்கும்.

மலேசிய ஆயுதப்படையின் ஆரம்ப விசாரணையில் பயிற்சியாளர்கள், கேடட்கள் மட்டுமே ஈடுபட்டிருந்ததாலும் பிரேத பரிசோதனை செயல்முறை முழுவதுமாக மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதும்

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க இந்த முழு அறிக்கை முக்கியமானது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset