நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி

கோலாலம்பூர்:

சீனாவில் திவேட் எனப்படும் தொழில் திறன் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று அறிவித்தார்.

ஏற்கெனவே 500 இந்திய மாணவர்கள் சீனாவில் தீவேட் கல்வியை பயில வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மித்ரா தலைவர் பிரபாகரன் மேலும் 500 மாணவர்களுக்கு சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில வாய்ப்பு வழங்குங்கள் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

அவரின் கோரிக்கை ஏற்று அடுத்த ஆண்டு அல்ல இந்த ஆண்டே மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று பலத்த கரவொலிக்கிடையே டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

மித்ராவின் மலேசிய சீனா இடையே திவேட் தொழில் திறன் பயிற்சி திட்ட நிகழ்வு இன்று மிகப்பெரிய அளவில் பண்டார் துன் ரசாக் அனைத்துலக இளைஞர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றிய போது டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இதை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset