
செய்திகள் மலேசியா
சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி: பிரபாகரன்
கோலாலம்பூர்:
சீனாவில் திவேட் எனப்படும் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி புரிந்துள்ளது.
மித்ராவின் தலைவர் பிரபாகரன் இதனை அறிவித்தார்.
சீனாவுக்கு சென்று வர விமான டிக்கெட் முதல் அவர்கள் திவேட் கல்வியை பயின்று வர அனைத்து செலவுகளையும் மித்ரா ஏற்றுக் கொண்டது.
இப்போது 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனாவுக்கு சென்று தொழில் திறன் கல்வியை பயின்று பத்திரமாக நாடு திரு்ம்பி உள்ளனர்.
இந்த வாரம் மற்றும் அடுத்த வாரத்தில் மேலும் பல இந்திய மாணவர்கள் சீனாவுக்கு செல்கிறார்கள்.
மடானி அரசாங்கம் இந்திய சமுதாய மாணவர்களுக்கு வழங்கிய இந்த வாய்ப்பை நமது மாணவர்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று கோலாலம்பூர் பண்டார் துன் ரசாக் அனைத்துலக இளைஞர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.
மித்ராவின் மலேசிய - சீனா இடையே தீவேட் தொழில் திறன் பயிற்சி திட்ட நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 10:33 pm
கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்
September 4, 2025, 10:31 pm
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 4, 2025, 10:30 pm
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஓணம் பண்டிகை வாழ்த்து
September 4, 2025, 10:28 pm
ஷாரா குதித்திருக்கலாம் அல்லது விழுந்திருக்கலாம்: நிபுணர்
September 4, 2025, 6:47 pm
முன்னாள் ஏஜிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் அனுமதி பெறத் தவறிவிட்டார்
September 4, 2025, 6:45 pm
தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி
September 4, 2025, 6:43 pm
சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி
September 4, 2025, 6:39 pm