நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிக் டாக்கின் உயர் நிர்வாகத்தினர் நாளை புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

டிக் டாக்கின் உயர் நிர்வாகத்தினர் நாளை புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்தார்.

சமூக ஊடக தளத்தில் போலிச் செய்திகளைப் பரப்புவது தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதில் போலிசாருடன் ஒத்துழைப்பதில் டிக்டாக் நிறுவனம் தாமதம் காட்டுகிறது.

இதனை தொடர்ந்து, அதன் உயர் நிர்வாகம் நாளை புக்கிட் அமானுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஷாரா கைரினா மகாதிர் வழக்கில் அறுவை சிகிச்சை நிபுணர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நபரின் வைரலான பதிவு, போலிச் செய்திப் பிரச்சினைகளில் இதில் ஒன்றாகும்.

போலிசாருக்கு தகவல்களை வழங்குவதில் டிக் டாக் மிகவும் மெதுவாக செயல்படுகிறதும்

இதனால் நான்  டிக் டாக்கின்ன் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ ஜி சியூவை அழைத்து, 

இது ஒரு குற்றம் என்றும் உங்கள் அமைப்பு மிகவும் மெதுவாக இருந்தது என்றும் தெரிவிக்க வேண்டியிருந்தது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset