நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போ மாநகர் மன்றத்திற்கு இரட்டை வெற்றி: பேராக் சுல்தானிடம் 10 ஆயிரம் ரிங்கிட் பரிசை பெற்றனர்.

ஈப்போ:  

2025 ஆம் ஆண்டு பேராக் மாநில அளவிலான தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து, உள்ளூர் அதிகாரசபை, சட்டப்பூர்வ அமைப்பு, தனியார் மற்றும் அரசு சாரா அமைப்பு பிரிவு மற்றும் சிறந்த உடையணிந்த பிரிவுக்கான இரண்டாம் இடம் என ஈப்போ மாநகர் மன்றம் (எம்.பி.ஐ) அணிவகுப்பு சாம்பியன் என அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றிக்காக, அணிவகுப்பு சாம்பியனுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் பரிசாக வழங்கப்பட்டது. அணிவகுப்பின் சாம்பியன் என்ற அடிப்படையில் 6 ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பரிசையும், சிறந்த உடையணிதலுக்கு இரண்டாம் இடத்திற்கு 4 ஆயிரம் ரிங்கிட் டையும் ஈப்போ மாநகர் மன்றம் அணிவகுப்பு பாராட்டுச் சான்றிதழையும் பெற்றது.

பேராக் தாருல் ரிட்சுவானின் மேன்மை தங்கிய படுகா ஶ்ரீ சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா, ஈப்போ மாநகர் மன்றத்திற்கு அணிவகுப்பு பரிசை வழங்கி சிறப்பித்தார்.

இந்த முறை ஈப்போ மாநகர் மன்ற குழுவின் தோற்றம், "மலேசியா மடானி: மக்கள் ஒற்றுமை" என்ற வாசகத்துடன் கூடிய ஆடை என்ற கருத்தாக்கத்தின் மூலம் தனித்து நின்றது.

இது ஜாலுர் ஜெமிலாங்கின் வண்ணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு நேர்த்தியான, துணிச்சலான மற்றும் தேசபக்தி உணர்வின் வடிவமைப்பை எடுத்துக்காட்டுகிறது. ஆடையின் வடிவமைப்பு ஈப்போ மாநகர் மன்ற கோப்ராட் திட்டமிடல் துறையைச் சேர்ந்த  நூர் ஷுஹாதா பிந்தி சமத்தின் படைப்பின் வெற்றியாகும்.

ஜூலை 30 முதல் தீவிர பயிற்சி பெற்ற எம்.பி.ஐ துறைகளைச் சேர்ந்த 10 செயலக அதிகாரிகள் மற்றும் 56 அணிவகுப்பு இசைக்குழு உறுப்பினர்கள் இந்த அணிவகுப்புடன் இருந்தனர். துடிப்பான மற்றும் மிகவும் ஒழுக்கமான செயல்திறன் நடுவர்களை தெளிவாகக் கவர்ந்தது. இதனால் அவர்கள் இந்த கொண்டாட்டத்தில் இரட்டை வெற்றியைப் பெற தகுதி பெற்றனர்.

 ஈப்போ மாநகரின் மேயர், துவான் ஜமாக்ஷாரி பின் ஹனிபா, நகர செயலாளர் துவான் ஹாஜி அஹ்மத் முனீர் பின் இஷாக் ஆகியோருடன் சேர்ந்து, எம்.பி.ஐ குழுவினர் இந்தப் பெருமைமிக்க சாதனையை வெற்றிகரமாகப் பதிவு செய்து சிறந்த வழிகாட்டலை வழங்கி முதுகெலும்பாக இருந்தனர் என்பது பாராட்டப்பட வேண்டும்.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset