நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹாரிஸின் மரணம் குறித்து விசாரிக்க  போலிசாருக்கு இடமும் நேரமும் கொடுங்கள்: ஐஜிபி

கோலாலம்பூர்:

சம்சுல் ஹாரிஸின் மரணம் குறித்து விசாரிக்க போலிசாருக்கு போதுமான இடமும் நேரமும் கொடுக்கப்பட வேண்டும்.

தேசிய போலிஸ்படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் இதனை வலியுறுத்தினார்.

ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலாப்ஸ்) கேடட் அதிகாரி சம்சுல் ஹாரிஸ் ஷம்சுதினின் கடந்த மாதம் மரணமடைந்தார்.

அவர்  மரணம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அனைத்து தரப்பினரும் அவகாசம் அளிக்க வேண்டும்.

அதே வேளையில் மருத்துவமனையிலிருந்து முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கைக்காக தனது தரப்பினர் இன்னும் காத்திருப்பதாக அவர் கூறினார்.

இதுவரை கிடைத்த தகவல்கள் முற்றிலும் வதந்தியாகும். மேலும் அறிக்கைகளுக்காக காத்திருங்கள்.

கோலா குபு பாரு போலிஸ் தலைமையகத்தில்  காவல் துறை டிப்ளோமா திட்டம், தேசிய தொழில் திறன் தரநிலை திட்ட அறிமுக விழாவிற்கு பின் அவர் நிருபர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset