நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியக் கலவரங்களில்  மலேசிய மாணவர்கள் யாரும் ஈடுபடவில்லை: ஜம்ரி

புத்ராஜெயா:

இதுவரை எந்த மலேசிய மாணவர்களும் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் நடந்துவரும் ஆர்ப்பாட்டங்கள் அல்லது கலவரங்களில் ஈடுபடவில்லை.

உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் இதனை தெரிவித்தார்.

மலேசிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்தோனேசியாவில் உள்ள மலேசியக் கல்வி அலுவலகம் விஸ்மா புத்ராவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இந்தோனேசியாவில் 1,200க்கும் மேற்பட்ட மலேசிய மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர்.

இதுவரை மலேசிய மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக எந்த அறிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை.

இருப்பினும் ஜாகர்த்தாவில் மட்டுமல்ல, இந்தோனேசியாவின் பிற பகுதிகளிலும் இதன் தாக்கம் இருப்பதால், அவ்வப்போது முன்னேற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset