நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத் தேர்தல்  அடுத்தாண்டு நடைபெறும்: அஸ்மின்

பெட்டாலிங் ஜெயா -

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் என பெர்சத்து கட்சி கணித்துள்ளது.

அக்கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இதனை கூறினார்.

16ஆவது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவிக்காலம் முடிவடையும் மாநிலங்கள் உட்பட பல தெளிவான விவகாரங்களை அடிப்படையாக கொண்டு இது கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் கட்சியின் வருடாந்திர பொது பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் 16ஆவது பொதுத் தேர்தலுக்கான கட்சியின் தயார் நிலையில் முழுமையாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

எங்கள் விவாதங்களில், தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு புதிய ஆணை தேவை என்ற அனுமானத்திற்கு பல காரணங்கள் பங்களித்தன. 

எனவே அடுத்த ஆண்டு 16ஆவது பொதுத் தேர்தலுடன் மாநிலத் தேர்தல்களும் நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த தேர்தலுக்கு கட்சியும் தேசியக் கூட்டணியும் தயாராக வேண்டும்.

இதனால் 16ஆவது பொதுச் தேர்தலுக்கான வழிகாட்டுதல் பெர்சத்து தலைவரின் கொள்கை உரையில் சேர்க்கப்படும்.

இன்று கட்சி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset