நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ மொஹைதினுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இல்லை: அஸ்மின்

கோலாலம்பூர்:

பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இல்லை.

அவர் நலமாக உள்ளார் என்று அக் கட்சியின் செயலாளர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெளிவுப்படுத்தினார்.

டான்ஸ்ரீ மொஹைதின் யாசின்  நல்ல உடல்நலத்துடன் உள்ளார். இந்த வார இறுதியில் நடைபெறும் வருடாந்திர பொது மாநாட்டில் அவர்  தீவிரமாகத் தயாராகி வருகிறார்.

இம்மாநாட்டில் 202 பிரிவுகளைச் சேர்ந்த 2,555 பேராளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதனால் அவர் அடிக்கடி தொடர்பில் இருந்து பேசி வருகிறார் என்று அவர் கூறினார்.

தலைவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர்.

பொதுச்செயலாளராக, நான் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவருடன் கலந்துரையாடுகிறேன்.

குறிப்பாக வருடாந்திர பொதுக் பேராளர் மாநாடு ஏற்பாடுகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அஸ்மின் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset