
செய்திகள் மலேசியா
பொறுப்பற்ற அறிக்கைகள் இனங்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும்: பேரா பாஸ் இளைஞர் தலைவருக்கு பாப்பாராயுடு அறிவுறுத்து
ஷாஆலம்:
பொறுப்பற்ற அறிக்கைகளினால் இனங்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதுடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பேரா பாஸ் இளைஞர் தலைவருக்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு அறிவுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் எந்தவொரு அறிக்கைகளையும் வெளியிடுவதற்கு முன் பாஸ் மலேசிய இளைஞர் துணைத் தலைவர் முஹம்மத் ஹபீஸ் சப்ரி சிந்திக்க வேண்டும்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரான முஹம்மத் ஹபீஸ் அனைவருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
மேலும் பொறுப்பற்ற முறையில் அறிக்கைகளை வெளியிடுவது மக்களை தவறாக வழிநடத்துவதும். குறிப்பாக இனங்களுக்கிடையில் வெறுப்பையும் ஏற்படுத்தும்.
ஒரு சம்பவத்தில் இனக் காரணங்களுடன் இணைப்பது நியாயமற்றது. மேலும் அது ஆபத்தானது.
ஏனெனில் அது கேள்விக்குரிய இனத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம்.
இந்த சம்பவம் சில தனிநபர்களை மட்டுமே உள்ளடக்கியது என்று பாப்பாராயுடு கூறினார்.
அனைத்து தரப்பினரும் குறிப்பாக சமூகத் தலைவர்கள், மரியாதைக்குரிய நாடாளுமன்ற சட்டமமன்ற உறுப்பினர்கள் சிந்தனை மனப்பான்மையைக் கடைப்பிடிக்குமாறு நான் அறிவுறுத்துகிறேன்.
எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளைச் சரிபார்த்து, செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
அரசியல் நலன்களுக்காக, 68 ஆண்டுகளாக நாம் பாதுகாத்து வந்த மக்களின் ஒற்றுமையை பாழாக்க வேண்டாம் என்று அவர் இன்று ஓர்அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று முஹம்மது ஹபீஸ் பதிவேற்றிய ஒரு பதிவில் ஈப்போவில் சுதந்திர தின விழாவில் பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷாவை அணுகிய ஒரு பெண்ணை, சீனப் பெண் என தொடர்புபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 10:33 pm
கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்
September 4, 2025, 10:31 pm
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 4, 2025, 10:30 pm
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஓணம் பண்டிகை வாழ்த்து
September 4, 2025, 10:28 pm
ஷாரா குதித்திருக்கலாம் அல்லது விழுந்திருக்கலாம்: நிபுணர்
September 4, 2025, 6:47 pm
முன்னாள் ஏஜிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் அனுமதி பெறத் தவறிவிட்டார்
September 4, 2025, 6:45 pm
தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி
September 4, 2025, 6:43 pm
சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி
September 4, 2025, 6:41 pm
சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி: பிரபாகரன்
September 4, 2025, 6:39 pm