நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா தேர்தலில் வெற்றி தான் முக்கியம்: ஜாஹித் ஹமிடி

கோலாலம்பூர்:

சபா தேர்தலில் வெற்றி தான் முக்கியம் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சபா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நம்பும் இடங்களில் தேசிய முன்னணி கவனம் செலுத்தும்.

சபாவில் தேர்தலில் நுழையும்போது போட்டியிடும் இடங்களை வெல்வதுதான் அந்தக் கூறுக்கு முக்கியம்.

தற்போது அம்னோ, ஜிஆர்எஸ் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மேலும் நம்பிக்கை கூட்டணி உடனான பேச்சுவார்த்தைகளை நாங்கள் வலுப்படுத்தி இறுதி செய்துள்ளோம். 

நம்பிக்கை கூட்டணி, ஜிஆர்எஸ்  இடையேயான ஒத்துழைப்பை நாங்கள் தற்போது மதிக்கிறோம்.

இதில் வெற்றி பெறுவதுதான் முக்கியம். எனவே நாம் வெல்லக்கூடிய இடங்களில் அதிக கவனம் செலுத்துகிறோம்.

அதுதான் எங்கள் கவனம் என்று  கிராமப்புற, வட்டார் மேம்பாட்டு அமைச்சில் நடந்த மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset