செய்திகள் கலைகள்
சிங்கப்பூரில் Cathay Cineplexes திரையரங்கங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன
சிங்கப்பூர்:
Cathay Cineplexes திரையரங்கங்கள் அனைத்தையும் மூட முடிவெடுத்திருப்பதாக அதை நிர்வகிக்கும் mm2 Asia நிறுவனம் அறிவித்திருக்கிறது.
கடனில் சிக்கிக்கொண்ட Cathay Cineplexes தொடர்ந்து செயல்படுவது இனி சாத்தியமில்லை என்று mm2 Asia, சிங்கப்பூர்ப் பங்குச்சந்தைக்கு ஒப்படைத்த அறிக்கையில் கூறியது.
கடன் அளித்தவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள நிறுவனம் முயன்றது. ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை.
2025 நிதி ஆண்டில் Cathay Cineplexes 122.4 மில்லியன் வெள்ளியை இழந்தது.
கோவிட்-19 நோய்ப்பரவலுக்குப் பின்னர் திரையரங்கங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் Cathay Cineplexesற்கு நட்டம் ஏற்பட்டதாக mm2 Asiaவின் தலைவர் மெல்வின் ஆங் (Melvin Ang) கூறினார்.
3 ஆண்டுகளில் 6 திரையரங்குகள் மூடப்பட்டன. 4 மட்டுமே செயல்பட்டன.
வாடகையாகச் செலுத்தவேண்டிய மில்லியன்கணக்கான வெள்ளி இன்னும் செலுத்தப்படவில்லை.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 5:40 pm
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகும்: சூர்யா நம்பிக்கை
August 13, 2026, 11:42 am
நடிகை அனுபமா பரமேஸ்வரனின் TOXIC RELATIONSHIP குறித்த வெளிப்படையான பேச்சு
August 8, 2026, 1:45 pm
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள DC திரைப்படம்: அனிருத் இசை சம்பவம்
August 6, 2026, 4:59 pm
புதுச்சேரியில் 3ஆவது உலகத் திரைப்பட விழா: 10 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும்
August 6, 2026, 4:48 pm
ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் செப்டம்பர் 4இல் வெளியாகிறது
August 5, 2026, 7:16 am
கஜினி, வீரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்
July 30, 2026, 10:47 am
