நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விரலை வெட்ட வேண்டிய அவசியமில்லை என மருத்துவர் கூறிவிட்டார்; என் கால் பாதுகாப்பாக உள்ளது: சத்தியா

கோலாலம்பூர்:

விரலை வெட்ட வேண்டிய அவசியமில்லை என மருத்துவர் கூறிவிட்டார். இதனால் என் கால் பாதுகாப்பாக உள்ளது.

பிரபல கலைஞர் சத்தியா இதனை தெரிவித்தார்.

கடந்த ஜூலை 31ஆம் தேதி மருத்துவர் இடது கட்டை விரலை மட்டுமே வெட்டி விட்டார்.

அதே நேரத்தில் ஆரம்பத்தில் துண்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மற்ற இரண்டு விரல்களும் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டன.

என் கால் தற்போது பாதுகாப்பாக உள்ளது. மேலும் இப்போது இந்த இரண்டு விரல்களுக்கும் மருந்து போட வேண்டும். 

எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மிகவும் அன்பானவர். மருத்துவர் எனக்கு நிறைய உதவினார்.

உடல்நலப் பரிசோதனைகளை எதிர்கொண்ட போதிலும் நான்  மகிழ்ச்சியாக உள்ளேன் என்று சத்தியா கூறினார்.

முன்னதாக, கிருமிகள் மேலும் பரவினால் தனது கால் துண்டிக்கப்படும் என்று சத்தியா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset