
செய்திகள் தொழில்நுட்பம்
மலேசியா தொழில்நுட்ப மந்தநிலையில் உள்ளது: நஜிப் விமர்சனம்
கோலாலம்பூர்:
மலேசியா தொழில்நுட்ப மந்தநிலையில் இருப்பதாக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார்.
ஆண்டுகளுக்கு மத்தியிலான பொருளாதார வளர்ச்சியிலும் மலேசியா மோசமான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப மந்தநிலை என்பது ஒரு நாடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு சரிவை எதிர்கொள்வதாகும்.
இந்நிலையில் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியா பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது என்றும், குறிப்பாக 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மலேசியா பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது என்றும் நஜிப் சுட்டிக்காட்டி உள்ளார்.
வட்டார அளவிலான அண்டை நாடுகளில் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ள ஒரே நாடு மலேசியாதான் என்று் குறிப்பிட்டுள்ள அந்த முன்னாள் பிரதமர், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியா 3.5%, சிங்கப்பூர் 6.5%, பிலிப்பீன்ஸ் 7.1% அளவுக்கு பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ள நஜிப், மலேசியா 4.5% எதிர்மறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
"கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதாக கூறி நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்திய, நாடாளுமன்றத்தை முடக்கிய ஒரே நாடு உலக அளவில் மலேசியா மட்டும்தான். உண்மையில், அவர்கள் அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தனர்," என்று நஜிப் தெரிவித்துள்ளார்.
அவர் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தலைமையிலான பெரிக்கத்தான் அரசை மறைமுகமாக சாடியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm