
செய்திகள் கலைகள்
என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் போலிசில் புகார்
சென்னை:
‘மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார்’ என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார் தெரிவித்துள்ளார். பிரபல சமையல் கலைஞரும், திரைப்பட நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ்.
டி.வி.யில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாதம்பட்டி ரங்கராஜுடன் நான் பழகும்போது அவருக்கு ஏற்கெனவே திருமணமானது எனக்கு தெரியாது. ஒருகட்டத்தில் எனக்கு தெரியவந்தபோது, ‘முதல் மனைவியை சட்டரீதியாகப் பிரியப் போகிறேன். தற்போது பிரிந்துதான் வாழ்கிறேன்’ என்று கூறினார்.
பின்னர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள திருவீதி அம்மன் கோயிலில் என்னை அவர் திருமணம் செய்து கொண்டார்.
நான் கர்ப்பமும் அடைந்தேன். அப்போது, குழந்தை வேண்டாம், கருக்கலைப்பு செய்து விடு என அவர் வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன். இந்நிலையில் 2 மாதமாக அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. 2 வாரத்துக்கு முன்பு அவரைச் சந்தித்தேன். அப்போது ‘உன்னிடம் பேச விரும்பவில்லை’ என்று கூறி, என்னை தாக்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தேன். அவர்தான் என் கணவர். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் அப்பா. அவருடன் சேர்ந்து வாழவே நான் விரும்புகிறேன்.
இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஜாய்கிரிசில்டா, நடிகர் விஜய்யின் ‘ஜில்லா’, ரவி மோகனின் ‘மிருதன்’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர். 2018-ல் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்குப் பின்னர் சினிமாவில் பணியாற்றுவதை நிறுத்திக் கொண்ட ஜாய் கிரிசில்டாவுக்கும், அவரது கணவருக்கும் திருமணமான 5 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2023-ல் இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 7:59 pm
தெலங்கானாவுக்கு ரூ.50 லட்சம் வெள்ள நிவாரண நிதி: நடிகர் பாலகிருஷ்ணா அறிவிப்பு
August 30, 2025, 12:43 am
மது போதையில் தகராறு: நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன்
August 28, 2025, 6:49 pm
மகள் அப்பாவை தோடும் பேஜம் திரைப்படம்; செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியீடு காண்கிறது: எஸ்டி பாலா
August 27, 2025, 5:39 pm
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
August 27, 2025, 12:38 pm
கார்த்தியின் கைதி திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது
August 25, 2025, 12:41 am
‘மதராஸி’ ஏ.ஆர்.முருகதாஸின் மற்றொரு ‘கஜினியா’?
August 22, 2025, 7:19 pm
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
August 20, 2025, 1:07 pm