நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மது போதையில் தகராறு: நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன்

கொச்சி: 

மது போதையில் தகராறு செய்து ஐடி ஊழியரை காரில் கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

கடந்த 24-ஆம் தேதி லட்சுமி மேனன் தனது நண்பர்களுடன் கொச்சியில் உள்ள மதுபானக் கூடத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு, மது அருந்த வந்த ஐடி ஊழியர் அலியார் ஷாவுடன் லட்சுமி மேனன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அலியார் ஷாவை தங்கள் காரில் கடத்தி சென்று கடுமையாக தாக்கி பின்னர் லட்சுமி மேமன் தரப்பினர் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து  போலீஸில் அலியார் ஷா புகார் அளித்தார். நடிகை லட்சுமி மேனன் தவிர 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதையடுத்து, முன்ஜாமீன் கோரி லட்சுமி மேனன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

ஐடி ஊழியரை தான் தாக்கவில்லை என்றும்  இந்த குற்றத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று லட்சுமி மேனன் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, செப்டம்பர் 17-ம் தேதி வரை நடிகை லட்சுமி மேனனை கைது செய்வதற்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset