நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

போயஸ் கார்டனில் வீடு வாங்கியிருக்கும் நயன்தாரா

சென்னை:

நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட், டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் படம் உட்பட சில படங்களில் நடிக்கும் நயன்தாரா, அட்லீ இயக்கும் படம் மூலம் இந்திக்கும் செல்கிறார். இந்தப் படங்களின் ஷூட்டிங் முடிந்ததும் காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா, போயஸ் கார்டனில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், இயக்குநர் அட்லீ, விஜய் ஆண்டனி உட்பட சில சினிமா பிரபலங்கள் அங்கு வீடு வாங்கியுள்ள நிலையில், நடிகை நயன் தாராவும் அங்கு 4 பெட்ரூம் கொண்ட வீட்டை வாங்கி இருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset