நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மகள் அப்பாவை தோடும் பேஜம் திரைப்படம்; செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியீடு காண்கிறது: எஸ்டி பாலா

கோலாலம்பூர்:

பல போராட்டங்கள், சவால்களுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டிருக்கும் பேஜம் எனும்  திரைப்படம் மிக செப்டம்பர் 4 ஆம் தேதி 30 தியேட்டரில் வெளியீடு காண்கிறது. 

பிரபல மேடை நாடக இயக்குனர் எஸ்.டி. பாலா இதனை தெரிவித்தார்.

இந்த பேஜம் எனும் திரைப்படம் ஒரு மணி 45 நிமிடம்  கொண்டது.

உண்மை சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன தனது அப்பாவை கண்டு பிடிக்க மகள் நடத்தும் போராட்டத்தை கண் முன்னே இந்த திரைப்படம் கொண்டு வருகிறது.

சிவநேஷ் அருணாச்சலம், வனிஷா குருஸ், அம்மு திருஞானம் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர்.

இது மலேசிய திரைப்படம். அனைத்து மலேசியர்களுக்கும் ஏற்ற படமாகும்.

காதல், அடிதடி இல்லாமல் ஒட்டு மொத்தமாக ஒரு குடும்பத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை இந்த படம் எடுத்து காட்டுகிறது.

காணாமல் போன தனது அன்புக்குரிய அப்பாவை கண்டு பிடிக்க மகள் படும் கஷ்டங்களை இந்த படத்தில் காண முடியும்.

மலாய் மற்றும் சீன நடிகர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட நடிகர் - நடிகைகள் இதில் நடித்துள்ளனர்.

கெடா சுங்கை பட்டாணியில்  முழுக்க முழுக்க படம் எடுக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி மலேசியாவில் 30 தியேட்டரில் வெளியீடு காணும் இந்த திரைப்படத்திற்கு ஆதரவு தரும்படி மலேசியர்களை எஸ்.டி. பாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset