
செய்திகள் கலைகள்
‘மதராஸி’ ஏ.ஆர்.முருகதாஸின் மற்றொரு ‘கஜினியா’?
கோடம்பாக்கம்:
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ’தர்பார்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், இந்தியில் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கினார் முருகதாஸ். இப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையில் தோல்விப்படங்களாக அமைந்தன.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ மூலம் மீண்டும் தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள தமிழுக்கு வந்துள்ளார் முருகதாஸ்.
விறுவிறுப்பாக கட் செய்யப்பட்ட ட்ரெய்லர் படம் மீதான ஆர்வத்தை தூண்டுகிறது. காதல் ஒரு பக்கம், ஆக்ஷன் ஒரு பக்கம், ஹீரோவுக்கு இருக்கும் பிரச்சினை என கதைக்களம் ‘கஜினி’யை நினைவூட்டுகிறது.
கெவின் குமாரின் ஆக்ஷன் காட்சிகள் ட்ரெய்லரிலேயே அனல் பறக்கின்றது. வித்யுத் பேசும் ‘துப்பாக்கி யார் கைல இருந்தாலும் நான் தான் வில்லன்’ என்ற வசனம் கவனம் ஈர்க்கிறது.
முருகதாஸுக்கு இப்படம் ‘கஜினி’ போல பேர்வாங்கித் தருமா, அல்லது தர்பார், சிக்கந்தர் போல் கவிழ்ந்துவிடுமா என்பதை தெரிந்து கொள்ள செப்.5 வரை காத்திருக்க வேண்டும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 12:43 am
மது போதையில் தகராறு: நடிகை லட்சுமி மேனனுக்கு முன்ஜாமீன்
August 28, 2025, 6:49 pm
மகள் அப்பாவை தோடும் பேஜம் திரைப்படம்; செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியீடு காண்கிறது: எஸ்டி பாலா
August 27, 2025, 5:39 pm
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
August 27, 2025, 12:38 pm
கார்த்தியின் கைதி திரைப்படம் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்படுகிறது
August 22, 2025, 7:19 pm
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
August 20, 2025, 1:07 pm
'மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம் வென்றார் மணிகா
August 16, 2025, 8:18 pm