நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் கட்டுமானத்தின்போது பாலம் இடிந்து விழுந்து 12 தொழிலாளர்கள் பலி

பெய்ஜிங்: 

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் பிரதான ஆற்றின் மீது ரயில்வே பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் மீது இருந்த 16 தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். ஆற்றில் விழுந்தவர்களை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

படகுகள், ஹெலிகாப்டர், ரோபோக்கள் மூலமாக தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும் 4 தொழிலாளர்களைக் காணவில்லை.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset