நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மின்-சிகரெட்டுகளில் கலக்கப்பட்டிருக்கும் etomidate போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகிறது: சிங்கப்பூர் அமைச்சர் ஓங் யீ காங் அறிவிப்பு

சிங்கப்பூர்:

மின்-சிகரெட்டுகளில் கலக்கப்பட்டிருக்கும் etomidate செப்டம்பர் 1ஆம் தேதி போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் அறிவித்திருக்கிறார்.

சட்டத்தில் Etomidate 'Class C' பிரிவில் வகைப்படுத்தப்படும். அதனால் etomidateஐ நாடு கடத்துவது, தயாரிப்பது, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வது, வைத்துக்கொள்வது, உட்கொள்வது ஆகியவை குற்றங்களாகும்.

சிங்கப்பூரில் போதைப்பொருள்கள் 'Class A', 'Class B', 'Class C' என்று 3 பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. ஆகக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படும் போதைப்பொருள்கள் 'Class A' பிரிவில் அடங்கும்.

புதிய கொள்கையைப் பற்றி மேல் விவரங்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி நடக்கவிருக்கும் செய்தியாளர் கூட்டத்தில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஓங் கூறினார்.

பிரதமர் லாரன்ஸ் வோங் ஆற்றிய தேசிய தினக் கூட்ட உரையின் போது etomidate கலந்த மின்-சிகரெட்டைப் பயன்படுத்துவோர் சிறைத்தண்டனையும் கடுமையான தண்டனைகளையும் எதிர்க்கொள்ளலாம் என்று கூறினார்.

Etomidate தற்போது நச்சுப்பொருள் சட்டத்தில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார். 

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset