நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

TikTok செயலியை வாங்குவதற்கு என்னிடம் ஆள் இருக்கிறது: டொனாலட் டிரம்ப்

வாஷிங்டன்:

TikTok செயலியை வாங்குவதற்கு அமெரிக்காவில் ஒருவர் தயாராக இருப்பதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

சீனாவின் ByteDance நிறுவனம் TikTok செயலியை விற்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் வற்புறுத்தி வருகிறது.

விற்காவிட்டால் செயலி தடை செய்யப்படும் என்று அது மிரட்டுகிறது.

விற்பதற்கான காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படும் என்று டிரம்ப் கூரினார்.

அதை வாங்கத் தயாராக இருப்பவர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. அது நிறுவனமா தனிநபரா என்ற விவரங்களும் அவர் வெளியிடப்படவில்லை.

TikTok செயலியால் அமெரிக்காவில் அந்தரங்க, பாதுகாப்பு மீறல்கள் ஏற்படலாம் என்ற கவலை இருக்கிறதா என்று கேட்டதற்கு டிரம்ப் இல்லை என்றார்.

தம்மை ஒரு TikTok ரசிகர் என்று அவர் குறிப்பிட்டார்.

TikTok செயலியை அமெரிக்காவில் 170 மில்லியன் பேர் பயன்படுத்துவதாக மதிப்பிடப்படுகிறது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset