நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நயாகரா பேருந்து விபத்தில் ஐவர் பலி: பல மணிநேரம் மூடப்பட்ட நெடுஞ்சாலை

நியூயார்க்:

அமெரிக்காவில் நயாகரா அருவிக்குச் (Niagara Falls) சென்றுவிட்டு நியூ யார்க் திரும்பிக் கொண்டிருந்த சுற்றுப்பயணிகள் பேருந்து, விபத்துக்குள்ளானதில் ஐவர் மாண்டனர்.

40க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் நம்பப்படுகிறது.

பேருந்தில் மொத்தம் 50க்கும் அதிகமானோர் இருந்ததாக AP செய்தி நிறுவனம் சொன்னது.

அவர்களில் பெரும்பாலோர் இந்தியா, சீனா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

பயணிகள் முக்கால்வாசிப்பேர் இருக்கை வாரை அணியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

விபத்து ஏற்பட்டபோது பேருந்து எந்த வாகனத்தின் மீதும் மோதவில்லை.

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்தைப் பள்ளத்தில் விட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

விபத்து காரணமாகப் பல மணிநேரம் மூடப்பட்டிருந்த முக்கிய நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது.

ஆதாரம்: A P

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset