நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

BREAKING NEWS: இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறையால் கைது

கொழும்பு:

இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.

இன்று காலை விசாரணைக்காக அவர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வருகை தந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

அரசாங்க நிதியைப் பயன்படுத்தி தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்த விசாரணை தொடர்பாக, 2023 செப்டம்பர் 22, 23 ஆகிய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பயணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படுகின்றன.

இந்தப் பயணத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் 10 பேர் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணை தொடர்பாக, முன்னதாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சான்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் துறை வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.

இந்த சம்பவம் இலங்கை அரசியல் வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-நிஹார் தய்யூப் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset