நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சன்னலே இல்லாத விமானத்திற்கு சன்னலோர இருக்கைக்குக் கட்டணமா?: கொதித்தெழுந்த வாடிக்கையாளர்கள் 

நியூயார்க்:

அமெரிக்காவின் டெல்ட்டா (Delta), யுனைட்டட் (United) ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் சன்னலோர இருக்கைகளுக்குக் கூடுதல் கட்டணத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால் அந்த விமானத்தில் ஒரு சன்னல்கூட இல்லை.

இதனால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அந்த இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கின்றனர்.

நிறுவனங்களின் இணையத்தளங்களில் சன்னலோர இருக்கைகளை வாங்கும்போது சன்னல் இருக்காது என்பது குறிப்பிடப்படுவதில்லை என்பதை வாடிக்கையாளர்கள் சுட்டிக் காட்டினர்.

சன்னல் இல்லாதபோது கூடுதல் கட்டணம் கேட்கக்கூடாது என்று வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.

வாடிக்கையாளர்களைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள் வாடிக்கையாளர்களை நிறுவனங்கள் ஏமாற்றியிருப்பதாகக் கூறுகின்றனர்.

ஆதாரம்: BBC

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset