நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்தில் இலவச உள்நாட்டு விமானப் பயணச்சீட்டுகள்

பேங்காக்:

தாய்லந்து, சுற்றுப்பயணிகளின் வருகையை அதிகரிக்கப் புதிய திட்டத்தை வகுத்து வருகிறது.

200,000 சுற்றுப்பயணிகளுக்கு இலவச உள்நாட்டு விமானப் பயணச்சீட்டுகளை வழங்க அந்நாட்டு பயண, விளையாட்டுத்துறை அமைச்சு திட்டமிடுகிறது.

அனைத்துலக விமானப் பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் சுற்றுப்பயணிகள் அந்தத் திட்டத்துக்குத் தகுதி பெறுவர்.

ஒருவழிப் பயணத்துக்கு 1,750 பாட் வரையிலும், இரு வழிப் பயணத்துக்கு 3,500 பாட் வரையிலும் மதிப்புமிக்க இலவசப் பயணச்சீட்டுகளை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

அதனுடன் 20 கிலோகிராம் எடையுள்ள பெட்டிகளையும் இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

திட்டத்தில் தாய்லாந்தின் 6 உள்ளூர் விமான நிறுவனங்கள் பங்குபெறுகின்றன.

700 மில்லியன் பாட் மதிப்புமிக்க அந்தத் திட்டத்திற்கான பரிந்துரை அடுத்த வாரம் அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படும் 

ஆதாரம்: Bangkok Post 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset