நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்

புத்ரா ஜெயா:

கோலாலம்பூர் நகரில் சில இடங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.

 KL Sentral, Masjid Jamek ரயில் நிலையம், Pasar Seni சந்தை, சைனா டவுன் அமைந்துள்ள பெட்டாலிங் தெரு போன்ற இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சுற்றுக்காவல் மட்டுமல்ல, கண்காணிப்புக் கேமரா செயல்முறைகளும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலத்துக்கேற்ப பாதுகாப்புச் செயல்முறைகளை மாற்றுவதாகச் சொன்ன அதிகாரிகள், பொது ஒழுங்கை நிலைநாட்ட 24 மணி நேரக் கண்காணிப்பு அவசியம் என்று வலியுறுத்தினர்.

கோலாலம்பூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில்  KL Sentral, Masjid Jamek, சைனா டவுன் போன்றவை அடங்கும்.

நாள்தோறும் KL Sentral நிலையத்திற்கு 2 மில்லியன் பேர் வரை வந்து செல்கின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset