
செய்திகள் மலேசியா
சுதந்திர உணர்வு மாணவர்களிடையே மலர செய்வது அவசியமாகும்: வழக்கறிஞர் சி. லாவண்யா
சுங்கை:
மேன்மைமிகு மலேசியாவை உருவாக்கவும் நாம் அனைவரும் மலேசியர்கள் என்னும் பெருமைமிகு சிந்தனையை விதைக்கவும் மாணவர்களிடையே சுதந்திர உணர்வு மேலோங்க வேண்டும் என இளம் வழக்கறிஞர் சி.லாவண்யா நினைவுறுத்தினார்.
ஒவ்வொரு மலேசியருக்கும் இது நம் நாடு.இந்நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நம் முன்னோர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றுதல்குரியது என்னும் சிந்தனை ஆழமாய் விதைக்கப்பட வேண்டும் என்றும் நினைவுறுத்திய அவர் மாணவர்களிடையே விதைக்கப்படும் நாட்டுப்பற்றும் தேசிய உணர்வும் வருங்கால தலைமுறையின் நம்பிக்கையான மலேசியர்களை உருவாக்கும் பெரும் சான்று எனவும் பெருமிதத்தோடு கூறினார்.
சுங்கை,பீடோர் வட்டாரப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய கொடியும் அன்பளிப்பும் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையில் லாவண்யா இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்,இந்நாட்டு ஆங்கிலேயர்கள்,போர்த்துகீசு மற்றும் ஜப்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, சுதந்திரம் பெறப்பட்டிருந்தாலும் பல்லினம் சார்ந்த இம்மண்ணில் மலேசியர்களிடையே உயிர்பித்திருக்கும் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வளமான நாட்டிற்கும் சிறப்புமிகு மேம்பாட்டிற்கும் பெரும் சான்றாக திகழ்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
அதேவேளையில்,தமிழ்ப்பள்ளிகள்,ஆலயங்கள் போன்றவை நமது அடையாளங்களாய் திகழும் நிலையில் இன்றைய மடானி அரசாங்கம் நமது உரிமைகளோடு தேவைகளையும் நிறைவாகவே செய்து வருவதாகவும் கூறியதோடு பேரா மாநில அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஆலயங்களுக்கும் நிறைவான மானியத்தையும் பங்களிப்பையும் செய்து வருவதாகவும் விவரித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைக்குரியவர்கள்.தமிழ்ப்பள்ளியில் படித்துதான் தாம் வழக்கறிஞராகவும் இன்று உயர்ந்து நிற்பதாகவும் நினைவுக்கூர்ந்த அவர் இந்தியர்களிடையே மேலோங்கியிருக்கும் நாட்டுப்பற்றும் தேசிய உணர்வும் காலத்தால் போற்றப்பட வேண்டிய அரும் பொக்கிசம் என்றார்.
சுதந்திர நாளை கொண்டாடும் நாம் ஒவ்வொருவரும் மலேசியர் என்னும் உயரிய சிந்தனையோடு கொண்டாடி மகிழ வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டு கொண்டார்.
சுங்கை தமிழ்ப்பள்ளி,பீடோர் தகான் தமிழ்ப்பள்ளி,பீக்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி,துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியோடு தேசிய மொழி பாலர்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஜாலோர் கெமிலாங் வழங்கப்பட்டு சுதந்திர நாள் உணர்வை வழக்கறிஞர் லாவண்யா விதைத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 11:38 pm
மாணவி சாரா கைரினா மகாதீர் மரணம்: 5 பதின்ம வயதுப் பெண்கள் மீது குற்றச்சாட்டு
August 20, 2025, 10:31 pm
புந்தோங் மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
August 20, 2025, 6:13 pm
மஞ்சோய், பங்கோர் அரசாங்க கிளினிக் அடுத்தாண்டு தொடக்கத்தில் திறக்கப்படும்: அ.சிவநேசன்
August 20, 2025, 11:54 am
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக குமாரின் நியமனம் சரியானதே: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
August 20, 2025, 9:31 am
கோலாலம்பூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
August 19, 2025, 6:43 pm
அமெரிக்காவில் 12 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
August 19, 2025, 6:30 pm