நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தை கொடுமைப்படுத்துதலை போன்ற சம்பவம் இனி நடக்கக்கூடாது: விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஜோகூர் இளவரசர் அழைப்பு 

ஜோகூர் பாரு:

ஜோகூர் இளவரசர் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில், மாநிலத்தில் கொடுமைப்படுத்துதலுக்கு எதிரான முழுமையான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஜோகூர் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல், கொடுமைப்படுத்துதலுக்கு எதிராக  துங்கு இஸ்மாயிலின் ஆணையை மாநில அரசு நிலைநிறுத்தும் என்று ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசி கூறினார்.

“மாநில அரசாங்கம்  ஜோகூரில் கொடுமைப்படுத்துதல் விஷயத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தொடரும்,” என்று அவர் இன்று KPJ  சிறப்பு மருத்துவமனையில் 10 வயதான இஸ்ஸுல் இஸ்லாம் அசுவான் இசைடியை சந்திக்க துங்கு மஹ்கோத்தா இஸ்மாயிலுடன் சென்ற பிறகு கூறினார்.

நான்காம் வகுப்பு மாணவர் இரண்டு தனித்தனி சம்பவங்களில் கொடுமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதனால் அவருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset