நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவில் 12 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

கோலாலம்பூர்:

12 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு எதிர் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை அமெரிக்காவின் வாஷிங்டன் மேரிலேண்ட் மேரியேட் நட்சத்திர தங்குவிடுதியில்  நடைபெற இருக்கிறது என்று இதன் ஏற்பாட்டுக் குழு தலைவர் டாக்டர் பி ஆர் எஸ் சம்பத் கூறினார்.

உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வாஷிங்டன், மேரிலேண்ட் மேயர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத், இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சரும் பிரபல நடிகருமானன நெப்போலியன் இந்த மாநாட்டின் இணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த மாநாட்டில் அமெரிக்காவில் இருந்து ஏறக்குறைய 500 பேராளர்கள்வரை கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மலேசியா, தமிழ் நாடு, இலங்கை, சிங்கப்பூர், மொரீஷியஸ்,வளைகுடா நாடுகள் உட்பட உலகம் முழுவதிலும் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

அமெரிக்காவில் இந்த மாநாடு முதல் முறையாக நடைபெறுகிறது  என்று சம்பத் குறிப்பிட்டார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுகாகும் அழைப்பு விடுத்துள்ளோம்.

இது தவிர்த்து தமிழ் நாடு அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

எல்லா கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இதில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.

இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் வி ஆர் எஸ் சம்பத்துடன் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் குழுத் தலைவர் டான்ஸ்ரீ ஆர் மாரிமுத்து, மாதா கல்வி நிறுவன குழும தலைவர் டாக்டர் எஸ் பீட்டர்,  சமூக ஆர்வலர் முபாரக் அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு 11-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு கோலாலம்பூர் கே.எல். மாநாட்டு மைய மண்டபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset