நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தைகள் துன்புறுத்தல் வழக்குகளுக்கான தீர்ப்பாயம் அமைப்பது குறித்து அமைச்சரவை விவாதிக்கும்: பிரதமர் அன்வார் 

புத்ரஜெயா:

குழந்தைகள் சம்பந்தப்பட்ட கொடுமைப்படுத்துதல் வழக்குகளை கையாள ஒரு தீர்ப்பாயம் அமைக்கும் திட்டம் குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"இந்த திட்டம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்படும்," என்று நிதியமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு அவர் சுருக்கமாக பதிலளித்ததாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மேற்கோள் காட்டியது.

நேற்று, பிரதமர் துறை (சட்டம், நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசலினா ஓத்மான் சைட், மாணவர்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட கொடுமைப்படுத்துதல் வழக்குகளை விசாரிக்க ஒரு தீர்ப்பாயத்தை நிறுவுவதை வலியுறுத்தும் கொடுமைப்படுத்துதல் எதிர்ப்புச் சட்டத்தை இயற்ற வேண்டியதன் அவசியத்தை புத்ரஜெயா மறுபரிசீலனை செய்யும் என்று பரிந்துரைத்தார்.

தற்போது, எந்தவொரு சட்ட விதியின் கீழும் கொடுமைப்படுத்துதல் குற்றத்திற்கு குறிப்பிட்ட வரையறை அல்லது தெளிவான தண்டனை எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset