நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாரா கைரினா பிரேத பரிசோதனையில் நோயியல் நிபுணர் என்று பொய் கூறிய டிக்டாக் பயனர் MCMCயிடம் பிடிபட்டார் 

புத்ராஜெயா:

"டத்தோ' பேராசிரியர் டாக்டர் துங்கு இஸ்கந்தர்" என்ற டிக்டாக் கணக்கின் பின்னணியில் உள்ள நபரை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடகங்கள் ஆணையம் (MCMC), அடையாளம் கண்டுள்ளது, அவர் ஒரு நோயியல் நிபுணரைப் போல ஆள்மாறாட்டம் செய்து, படிவம் ஒன்று மாணவி ஜாரா கைரினா மகாதீரின் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டதாகக் கூறிக் கொண்டார்.

சந்தேக நபர் ஒரு நோயியல் நிபுணர் அல்ல என்பதை சுகாதார அமைச்சகம் இன்று ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியது.

"அந்தக் கணக்கின் 'டிக்டாக் லைவ்' அமர்வில் இணைந்த இரண்டு நபர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் நேற்று இரவு கோத்தா டாமன்சாரா அருகே அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டார்.

"சந்தேக நபர் வாக்குமூலம் பதிவு செய்ய டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அதே நேரத்தில் அவரது தகவல் தொடர்பு சாதனங்களும் பகுப்பாய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டன," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தவறான தகவல்களைப் பரப்புவது, குறிப்பாக இறப்புகள், துயரங்கள் அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற முக்கியமான பிரச்சினைகள் சம்பந்தப்பட்டது, குடும்பங்களின் உணர்வுகளைப் புண்படுத்தும், பொதுமக்களை தவறாக வழிநடத்துவதோடு அதிகாரிகளின் விசாரணைகளை சீர்குலைக்கும் ஒரு கடுமையான குற்றமாகும் என்று MCMC கூறியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset