நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்கா வரிவிதிப்பால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி மெதுவடையலாம்: தெங்கு சஃப்ருல் அஜீஸ்

கோலாலம்பூர்:

மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவின் வரிவிதிப்பால் மெதுவடையக்கூடும் என்று வர்த்தக அமைச்சர் தெங்கு சப்ருல் அஜீஸ்   தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு மலேசியாவின் வளர்ச்சி 0.6 முதல் 1.2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை இருக்கலாம் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியும் மெதுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

அமெரிக்கா விதிக்கும் வரியின் தாக்கம் ஆண்டு முழுதும் உணரப்படலாம் என்று தமது வர்த்தக அமைச்சு உணர்ந்துள்ளது என்றார் அவர்.

இவ்வாண்டுக்கான அதன் வளர்ச்சி விகித முன்னுரைப்பு கடந்த மாதம் 4 முதல் 4.8 விழுக்காடாகக்  குறைக்கப்பட்டது.

முன்னதாக அது 4.5 விழுக்காடு முதல் 5.5 விழுக்காடாயிருந்தது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset