
செய்திகள் மலேசியா
மாணவி சாரா கைரினா மகாதீர் மரணம்: 5 பதின்ம வயதுப் பெண்கள் மீது குற்றச்சாட்டு
கோத்த கினபாலு:
சபா மாநிலத்தில் 13 வயது மாணவியை பகடிவதை செய்து துன்புறுத்தியதாகப் பதின்ம வயதுப் பெண்கள் ஐவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐவரும் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தனர்.
சென்ற மாதம் (ஜூலை) 13 வயது சாரா கைரினா மகாதீர் (Zara Qairina Mahathir) துன்புறுத்தலால் மாண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சென்ற மாதம் 15ஆம் தேதி இரவு நேரத்தில் பள்ளியின் மாணவர் விடுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.
மறுநாள் (ஜூலை 16) அதிகாலை சுமார் 4 மணிக்கு சாரா விடுதியின் 3ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
ஜூலை 17ஆம் தேதி உள்ளூர் மருத்துவமனையில் அவரது மரணம் அறிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த ஐவருக்கும் ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அடுத்த மாதம் (செப்டம்பர்) 25ஆம் தேதி வழக்கு விசாரணை மீண்டும் தொடரும்.
இந்த வழக்கு நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி ஸாராவுக்கு நீதி வேண்டும் என்று மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
சபா மாநிலத்தில் இம்மாதம் 14ஆம் தேதி மாணவிக்கு ஆதரவாகப் பேரணி நடத்தப்பட்டது. அதில் 20,000 பேர் கலந்து கொண்டனர்.
சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இளையர்கள் என்பதால் வழக்கு பற்றியோ, சம்பந்தப்பட்ட ஐவர் குறித்தோ விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஐவருமே மாணவி ஸாராவுக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டை எதிர்நோக்கவில்லை என்று மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
அவர்கள் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை மட்டுமே எதிர்நோக்குகின்றனர்.
ஆரம்பத்தில் விசாரணை முடிந்துவிட்டதாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் பணக்காரக் குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக உண்மை மூடிமறைக்கப்படுவதாக மக்கள் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடர்ந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 10:31 pm
புந்தோங் மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
August 20, 2025, 6:13 pm
மஞ்சோய், பங்கோர் அரசாங்க கிளினிக் அடுத்தாண்டு தொடக்கத்தில் திறக்கப்படும்: அ.சிவநேசன்
August 20, 2025, 6:09 pm
சுதந்திர உணர்வு மாணவர்களிடையே மலர செய்வது அவசியமாகும்: வழக்கறிஞர் சி. லாவண்யா
August 20, 2025, 11:54 am
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக குமாரின் நியமனம் சரியானதே: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
August 20, 2025, 9:31 am
கோலாலம்பூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
August 19, 2025, 6:43 pm
அமெரிக்காவில் 12 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
August 19, 2025, 6:30 pm