செய்திகள் கலைகள்
‘தர்பார்’, ‘சிக்கந்தர்’ ஆகிய படங்கள் பெரும் தோல்வி அடையக் காரணம் “சினிமா எடுப்பதில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டோம் என நான் நினைத்ததுதான்: உள்ளம் திறந்த ஏ.ஆர்.முருகதாஸ்
சென்னை:
“சினிமா எடுப்பதில் ‘மாஸ்டர்’ ஆகிவிட்டோம் என நினைத்தது நான் செய்த மிகப் பெரிய தவறு” என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தர்பார்’, ‘சிக்கந்தர்’ ஆகிய படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் பலரும் ஏ.ஆர்.முருகதாஸை கடுமையான சாடினார்கள்.
தற்போது அவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் தான் செய்த தவறு என்னவென்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, “7-ம் அறிவு’ படத்தின் இறுதிகட்டப் பணிகளின்போது, ‘துப்பாக்கி’ படத்தின் முதல் பாதி கதை மட்டுமே என்னிடம் இருந்தது. அதைத்தான் எஸ்.ஏ.சி சார் மற்றும் விஜய் சார் இருவரிடமும் சொன்னேன். இந்தப் படம் பண்ணலாம் என்று உடனே கூறிவிட்டார்கள். 2-ம் பாதி இனிமேல்தான் பண்ண வேண்டும் என்றேன். அவுட்லைன் கேட்கலாம் என்று தான் வந்தேன். எனக்கு முதல் பாதியே நன்றாக இருக்கிறது பண்ணலாம் என்று விஜய் சார் கூறினார்.
அப்போது இறுதிகட்டப் பணிகளுக்கு இடையே ‘துப்பாக்கி’ 2-ம் பாதியை தயார் செய்து முழுமையாக அல்லாமல் அவுட்லைனாக கூறினேன். சூப்பர் என்று கூறிவிட்டார் விஜய் சார். ‘7-ம் அறிவு’ வெளியாகி 25 நாட்களில் ‘துப்பாக்கி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டோம். மும்பையில் 9-6 படப்பிடிப்பு என்பதால், 6 மணிக்கு மேல் காட்சியாக யோசித்து 2-ம் பாதி எழுதிக் கொண்டிருந்தேன். அனைத்தையும் அவ்வப்போது முடிவு செய்து எடுத்ததே பெரிய வெற்றி என்று நினைத்தேன். அதுவே எனக்கு பெரிய மைனஸாகவும் மாறியது.
நாம் மாஸ்டர் ஆகிவிட்டோம் என நினைத்துவிட்டேன். இப்படி செய்வது தவறு என்று எனக்கு அப்போது தோன்றவில்லை. ஒருவேளை ‘துப்பாக்கி’ படம் தோற்று இருந்தால் தோன்றியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 5:30 pm
Banduan திரைப்படத்தின் முதல் காட்சியை காண மலேசியா வந்துள்ளார் நடிகர் கார்த்தி
November 2, 2025, 5:34 pm
பரசுராம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை
October 30, 2025, 7:32 am
மருத்துவத்திற்கு நிதி உதவி செய்ய முன் வந்த நடிகர் மம்முட்டி: பாராட்டும் இணையவாசிகள்
October 29, 2025, 5:45 pm
ஒரு அண்ணனாக, அதற்கு நான் ரவி தேஜாவுக்கு நன்றி சொல்கிறேன்: நடிகர் சூர்யா
October 27, 2025, 12:58 pm
பலூசிஸ்தானை ஆதரித்து பேசினாரா சல்மான் கான்?: தீவிரவாதிகள் பட்டியலில் சல்மானை சேர்த்த பாகிஸ்தான்
October 24, 2025, 12:03 pm
"தம்பி, தவறான தகவலைப் பரப்புவது தீங்கையே தரும்": விஜய் குறித்து பரவிய செய்திக்கு நடிகர் சூரி விளக்கம்
October 23, 2025, 4:33 pm
நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி காலமானார்
October 23, 2025, 3:32 pm
இசையமைப்பாளரும் தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்
October 20, 2025, 9:18 pm
துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14இல் வெளியாகிறது
October 17, 2025, 8:11 pm
