செய்திகள் கலைகள்
தீபாவளி வெளியீட்டில் இருந்து சூர்யாவின் ‘கருப்பு’ படம் பின்வாங்கி இருக்கிறது
கோடம்பாக்கம்:
தீபாவளி வெளியீட்டில் இருந்து சூர்யாவின் ‘கருப்பு’ படம் பின்வாங்கி இருக்கிறது. சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பை தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன.
தற்போது இதன் வெளியீடு எப்போது என்பது பெரும் கேள்வியாக இருந்தது. முதலில் தீபாவளி வெளியீடாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தன.
இதன் ஓடிடி, தொலைக்காட்சி உரிமம் விற்பனை குறித்து தயாரிப்பு நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையின்படி இந்த ஆண்டு இப்படம் வெளியீடு இருக்காது என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், இந்த ஆண்டுக்கான படங்கள் அனைத்தும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கி முடித்துவிட்டார்கள். ஆகையால், ‘கருப்பு’ தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது.
மேலும், இன்னும் சில காட்சிகள் படப்பிடிப்பு வேறு பாக்கி இருக்கிறது. தற்போதைய சூழலில் அக்டோபரில் தீபாவளி வருகிறது. அதனால் வெளியீடு சாத்தியமே இல்லை என்பது தெரிகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப் படத்தில் சூர்யா, த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ண், இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 5:41 pm
எனது முழு பெயர் தபசும் ஃபாத்திமா: மனம்திறந்த நடிகை தபு
January 31, 2026, 10:45 am
சிறந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த நடிகர் தனுஷ்: தமிழக அரசு விருதுப் பட்டியல் அறிவிப்பு
January 26, 2026, 6:53 pm
மலையாளத் திரைப்படமான Patriot வெளியீட்டு நாள் அறிவிப்பு
January 20, 2026, 12:24 pm
Gegar Vaganza பாட்டுத்திறன் போட்டியில் சிங்கப்பூர்ப் பாடகர் இஸ்கண்டார் இஸ்மாயில் வாகை சூடினார்
January 19, 2026, 5:10 pm
ரஹ்மான் இந்தியாவின் நவீன அடையாளங்களின் ஒருவர்: அவரை குறை கூறுபவர்கள் அவர் இடத்தை நெருங்க முடியாது
January 12, 2026, 3:10 pm
என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது: மனம் திறந்த நடிகர் ஜீவா
January 7, 2026, 11:32 pm
மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு
January 7, 2026, 10:29 pm
‘ஜனநாயகன்’ வெளியீட்டில் சிக்கல்: தணிக்கை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்போது?
January 2, 2026, 5:10 pm
