
செய்திகள் கலைகள்
‘கூலி’ பாடலை பாராட்டிய ஹாலிவுட் நடிகை: நடிகை பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி
சென்னை:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’, ஆக.14-ஆம் தேதி வெளியாகிறது. இதில், சத்யராஜ், ஆமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
அவர் இசையில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா…’ என்ற பாடல் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஆடியுள்ளார். இந்தப் பாடல் வைரலான நிலையில், ரசிகர்கள் பலர், பிரபல ஹாலிவுட் நடிகை மோனிகா பெலுச்சிக்கு இந்தப் பாடலை அனுப்பி வந்தனர்.
மோனிகா பெலுச்சியின் தோழி மெலிட்டா மூலமாக மூலமாக அவருக்கு இப்பாடல் சென்றுள்ளது. அதைக் கேட்ட மோனிகா, அந்தப் பாடலை, தான் மிகவும் ரசித்ததாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து நெகிழ்ந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, “மோனிகா பெலுச்சியின் வார்த்தைகள் எனக்குக் கிடைத்த பாராட்டுகளிலேயே முக்கியமானது. எனக்கு அவரை அதிகம் பிடிக்கும். அவரிடமிருந்து பாராட்டுப் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 3:48 pm
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம்: உற்சாகத்தில் ரசிகர்கள்
August 10, 2025, 6:33 pm
‘கூலி’ சிறப்புக் காட்சிக்கு ‘வசூல்’ வேட்டை: ரஜினி ரசிகர்கள் படத்தை புறக்கணிக்க முடிவு
August 7, 2025, 5:51 pm
நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறை விசாரணை
August 4, 2025, 7:55 am
நடிகர் சல்மான் கான் குறித்து நடிகை ரேவதி
August 3, 2025, 4:35 pm
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் சடலமாக மீட்பு
August 2, 2025, 11:24 pm
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்
August 2, 2025, 8:29 pm
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தேசிய விருது வழங்கியதற்கு கேரள முதல்வர் கடும் கண்டனம்
August 2, 2025, 9:02 am
ஜிவி பிரகாஷ் குமார் - எம்எஸ் பாஸ்கருக்கு தேசிய விருது
July 29, 2025, 7:48 am