நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் 60,000க்கும் மேற்பட்டோர் தொழிற்சங்கங்களில் இணைந்துள்ளனர்: ஹாஜிஜி

கோத்த கினபாலு:

சபாவில் மொத்தம் 60,764 தொழிலாளர்கள் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

சபா மாநில முதலமைச்சர் ஹாஜிஜி நூர் இதனை கூறினார்.

மொத்தத்தில், 22,317 தொழிலாளர்கள் அரசுத் துறை ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் (35,194), 3,253 பேர் சட்டப்பூர்வ அமைப்புகள் ஆகும்.

மாநிலத்தில் 92 பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. அவை சபா தொழிற்சங்க விவகாரத் துறையால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இதில் 23 அரசுத் துறை தொழிற்சங்கங்கள், 52 தனியார் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் 16 சட்டப்பூர்வ அமைப்பு தொழிற்சங்கங்கள் உள்ளன என்று ஹாஜிஜி கூறினார்.

சபாவில் கடந்த ஆண்டு 1.7 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர் படை இருந்தது.

மேலும் இந்தப் பணியாளர்களின் கூட்டுப் பங்களிப்பு சபாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 84.3 பில்லியன் ரிங்கிட் அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset