நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிஎஸ்கே குழுமத்தின் இலவச இந்திய கலாச்சார வகுப்புகளுக்கான மாணவர்கள் பதிவு தொடங்கியது: டத்தோ சிவக்குமார்

பத்துமலை:

டிஎஸ்கே குழுமத்தின் இலவச இந்திய கலாச்சார வகுப்புகளுக்கான மாணவர்கள் பதிவு அதிகாரப்பூர்வமாக  தொடங்கியுள்ளது.

டிஎஸ்கே குழுமத்தின் தலைவரும் மஹிமா தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

இந்திய பாரம்பரிய கலை, கலாச்சாரங்களை இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் டிஎஸ்கே குழுமம் இம்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொர் ஆண்டும் இம்முயற்சிகளின் வாயிலாக பல மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

அவ்வகையில் இவ்வாண்டு தேவாரம், சமயம், பரதநாட்டியம், வயலின், வீணை, விசைப்பலகை ஆகிய வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் ஆதரவுடன் இவ்வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

இந்த வகுப்புகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி பத்துகேவ்ஸ் கலாச்சார மையத்தில் தொடங்கவுள்ளது.

ஆகவே ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வகுப்புக்கு தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

மேல்விவரங்களுக்கு நவின் 012-716 1575, சத்தியா 011-2671 9946, பூபாலன் 016-382 4090 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset