நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சத்யா உட்பட சிரமப்படும் கலைஞர்களின் நலனில் மடானி அரசு அக்கறை செலுத்தும்: தியோ

கோலாலம்பூர்:

மூத்த கலைஞர் சத்யா உட்பட சிரமப்படும் கலைஞர்களின் நலனில் மடானி அரசு அக்கறை செலுத்தும்.

தகவல் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் இதனை கூறினார்.

இப்போதுதான் நான் மூத்த நடிகர்கள், நகைச்சுவை நடிகர்களான சத்தியா பெரியசாமி, டினோ எனப்படும் முகமட் ஷா பின் ரோஸ்லி ஆகியோரைச் சந்தித்தேன்.

அவர்கள் இருவரும்  நிக்கோ ஜி குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். இருவரும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

சத்தியா நீரிழிவு காரணமாக காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.

மேலும்  டினோ கடந்த மூன்று வாரங்களாக பக்கவாதத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

இந்த இரண்டு கலைஞர்களின் சுமைகளையும் அவர்களது குடும்பங்களின் சுமைகளையும் குறைக்க சில நிதி உதவிகள் வழங்கப்பட்டது.

பினாஸ், கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து தகவல், தொடர்பு அமைச்சின் வாயிலாக இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

அவசரகால சூழலில்  சிரமங்களின் உள்ள எந்த கலைஞர்கள் பினாஸ், தவகல் தொடர்பு அமைச்சிடம் உதவிகள் கேட்க தயங்கக் கூடாது.

அவர்களுக்கு உதவ நாங்கள் காத்திருக்கிறோம் என்று தியோ நீ சிங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset