நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கொடி தலைகீழாக  பறக்க விட்ட சம்பவம்; உள்ளூர் ஆடவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்: போலிஸ்

போர்ட்டிக்சன்:

தேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்ட சம்பவம் தொடர்பில்  உள்ளூர் ஆடவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்.

போர்ட்டிக்சன் மாவட்ட போலிஸ் தலைவர் மஸ்லான் உடின் இதனை கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை போர்ட்டிக்சனில் உள்ள ஒரு பள்ளியில் தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ உதவ 30 வயது உள்ளூர் நபரை போலிசார் அழைப்பார்கள்.

இவ்விவகாரம் குறித்து நேற்று 32 வயது உள்ளூர் நபரால் போலிசில் புகார் செய்யப்பட்டது. விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset