
செய்திகள் மலேசியா
பிரபலங்கள், தொழிலதிபர்கள் சாலை வரி செலுத்தாமல் சொகுசு கார்களைப் பயன்படுத்துகின்றனர்: ஜேபிஜே
கோலாலம்பூர்:
நாட்டில் பிரபலங்கள், தொழிலதிபர்கள் சாலை வரி செலுத்தாமல் சொகுசு கார்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஜேபிஜே எனப்படும் சாலைப் போக்குவரத்துத் துறையின் சட்ட அமலாக்க மூத்த இயக்குநர் முஹம்மது கிப்லி மா ஹாசன் இதனை கூறினார்.
சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பெராரி, லம்போர்கினி, போர்ஷே போன்ற சொகுசு வாகனங்களின் உரிமையாளர்களில் பிரபலங்கள், தொழிலதிபர்கள் அடங்குவர்.
இவர்கள் நீண்ட காலத்திற்கு சாலை வரி செலுத்துவதைத் தவிர்ப்பது, காப்பீட்டுத் தொகையை செலுத்துவதைத் தவிர்ப்பது கண்டறியப்பட்டது.
அவர்கள் வாகனங்களை அரிதாகவே பயன்படுத்தியதாகவும், அவற்றை வார இறுதி கார்களாக மட்டுமே பயன்படுத்தியதாகவும் சாக்குப்போக்கைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டனர்.
கேள்விக்குரிய சொகுசு வாகனங்கள் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக வார இறுதி நாட்களிலும் சில நாட்களில் பயன்படுத்துகின்றன.
இருப்பினும் இது இன்னும் ஒரு குற்றமாகும். காரணம் சாலை வரி, காப்பீடு நீண்ட காலத்திற்கு புதுப்பிக்கப்படவில்லை.
ஒருவேளை இந்த தனிநபர்கள் இதைப் பயன்படுத்துவது அரிதாக இருக்கலாம். எனவே சாலை வரி, காப்பீட்டைப் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை
சாலையில் இதுபோன்ற சொகுசு வாகனத்தைக் கண்டறிந்தால் ஜேபிஜே நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2025, 7:15 pm
சபாவில் 60,000க்கும் மேற்பட்டோர் தொழிற்சங்கங்களில் இணைந்துள்ளனர்: ஹாஜிஜி
August 4, 2025, 5:30 pm
தேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்ட சம்பவம்; உள்ளூர் ஆடவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்: போலிஸ்
August 4, 2025, 5:28 pm
சத்யா உட்பட சிரமப்படும் கலைஞர்களின் நலனில் மடானி அரசு அக்கறை செலுத்தும்: தியோ
August 4, 2025, 4:50 pm
கொலை வழக்கில் மகனின் உடலை புதைத்த சந்தேக நபருக்கு ரொம்பினில் உள்ள அமைதியான இடம் தெரியும்: போலிஸ்
August 4, 2025, 4:38 pm