நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சல்மான் கான் குறித்து நடிகை ரேவதி

சென்னை:

நடிகர் சல்மான்கான் குறித்து நடிகை ரேவதி கூறிய, ஆங்கிலம் தமிழ் கலந்த
நேர்காணலில் இருந்து சில பகுதிகள் வருமாறு:

"என் தந்தை வட இந்தியாவில் இருந்ததால், நான் கற்றுக் கொண்ட 
முதல் மொழி ஹிந்தி, பத்துக்கும் மேற்பட்டு ஹிந்தி படங்களில் பங்களித்திருக்கிறேன்;

எனக்கும், சல்மான்கானுக்கும் சம வயது;
ஹிந்தியில் "LOVE" படத்தில் சேர்ந்து நடித்தோம், ஒன்றரை ஆண்டுகளாக சுரேஷ் கிருஷ்ணா எடுத்த படம்!

அந்த காலத்தில் சல்மான், திரைத்துறைக்கு வந்து 2,3 வருடங்கள் ஆகியிருந்தன; 
6,7- படங்களில் நடித்திருந்தார்; 
நான் அவருக்கும் முன்பே, 6,7- ஆண்டுகளாக நடித்து வந்தேன்;

அந்த நேரத்தில் சல்மான் யங் பாய்!
அவருக்கு என் மீது மிகுந்த மரியாதை இருந்தது; 

நான் தெலுங்கு படத்தில் நடித்திருந்ததன் தாக்கத்தால், சல்மான் 
என்னை, "ரேவதி காரு" என்றே அழைப்பார்; "நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" எனக் கேட்பார்!

சல்மான் கான் ரொம்ப நல்ல மனிதர்; நாங்கள்  இன்றைக்கும்  நண்பர்கள்!
நான் அவருக்கு போன் பண்ண முடியும்; செய்தி அனுப்புவேன்; குறைந்தபட்சம் பேச்சுத் தொடர்பில் இருக்கிறோம்!

சல்மானிடம் சமூக நடவடிக்கைகளாக தானம் செய்யும் சில அமைப்புகள் இருந்தன; என்னிடம் அவர்;

"ரேவதி, நாம் இதைச் செய்யலாமா?"
"இந்த மக்கள் இங்கே இருக்கிறார்கள்; இவர்களை ஏற்றுக் கொள்ளலாமா", கேட்பார், உடனடியாகச் செய்வார்!

சிலவற்றின் மீதான தலைமைத்துவத் தொடுதல் அவருக்கிருந்தது;

நான் எடுத்த "Phir milenge" மீண்டும் சந்திப்போம்! ஹிந்தி படத்தில்,நான் கேட்டுக் கொண்டதை ஏற்று மிகச் சிறிய வேடத்தில் நடித்தார்".

(சித்ரா லட்சுமணன்; ரேவதி நேர்காணல் நிகழ்விலிருந்து)

தொகுப்பு: சோதுகுடியான்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset