
செய்திகள் கலைகள்
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்
சென்னை:
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப்.
தமிழில் 150க்கும் அதிகமான படங்களில் நடித்தவர்.
குறிப்பாக அவருடைய முகபாவனைகள், தனித்துவச் சிரிப்பு மிகவும் பிரபலம்.
மதன் பாபு என்ற பெயரை வானமே எல்லை படத்தில் மதன் பாப் என்று மாற்றினார் இயக்குநர் கே.பாலசந்தர்.
முதலில் இசையமைப்பாளராகவே தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்பு நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், மிமிக்ரி கலைஞர் என பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.
இன்று மாலை சிகிச்சை பலனின்றி மருத்துமவனையில் காலமானார்.
சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மதன் பாப் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 3:48 pm
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம்: உற்சாகத்தில் ரசிகர்கள்
August 13, 2025, 11:31 am
‘கூலி’ பாடலை பாராட்டிய ஹாலிவுட் நடிகை: நடிகை பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி
August 10, 2025, 6:33 pm
‘கூலி’ சிறப்புக் காட்சிக்கு ‘வசூல்’ வேட்டை: ரஜினி ரசிகர்கள் படத்தை புறக்கணிக்க முடிவு
August 7, 2025, 5:51 pm
நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறை விசாரணை
August 4, 2025, 7:55 am
நடிகர் சல்மான் கான் குறித்து நடிகை ரேவதி
August 3, 2025, 4:35 pm
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் சடலமாக மீட்பு
August 2, 2025, 8:29 pm
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தேசிய விருது வழங்கியதற்கு கேரள முதல்வர் கடும் கண்டனம்
August 2, 2025, 9:02 am
ஜிவி பிரகாஷ் குமார் - எம்எஸ் பாஸ்கருக்கு தேசிய விருது
July 29, 2025, 7:48 am