
செய்திகள் கலைகள்
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தேசிய விருது வழங்கியதற்கு கேரள முதல்வர் கடும் கண்டனம்
திருவனந்தபுரம்:
பிரிவினையை ஏற்படுத்தும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ள தேசிய விருதுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
71-வது தேசிய திரைப்பட விருதுகளை தில்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது 'தி கேரளா ஸ்டோரி' படத்தை இயக்கிய சுதீப்தோ சென்னுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கவுரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம், எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது.
மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
சிறந்த தமிழ் திரைப்படமாக 'பார்க்கிங்' தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகர் விருது, சிறந்த திரைக்கதைக்கான விருதும் இப் படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 3:48 pm
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம்: உற்சாகத்தில் ரசிகர்கள்
August 13, 2025, 11:31 am
‘கூலி’ பாடலை பாராட்டிய ஹாலிவுட் நடிகை: நடிகை பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி
August 10, 2025, 6:33 pm
‘கூலி’ சிறப்புக் காட்சிக்கு ‘வசூல்’ வேட்டை: ரஜினி ரசிகர்கள் படத்தை புறக்கணிக்க முடிவு
August 7, 2025, 5:51 pm
நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறை விசாரணை
August 4, 2025, 7:55 am
நடிகர் சல்மான் கான் குறித்து நடிகை ரேவதி
August 3, 2025, 4:35 pm
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் சடலமாக மீட்பு
August 2, 2025, 11:24 pm
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்
August 2, 2025, 9:02 am
ஜிவி பிரகாஷ் குமார் - எம்எஸ் பாஸ்கருக்கு தேசிய விருது
July 29, 2025, 7:48 am