நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஜிவி பிரகாஷ் குமார் - எம்எஸ் பாஸ்கருக்கு தேசிய விருது

புது டெல்லி:

டெல்லியில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் வெளியான ‛பார்க்கிங்' திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வாகி உள்ளது.

தமிழில் சிறந்த தமிழ் திரைப்படமாக ‛பார்க்கிங்’ தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அந்த படத்தில் நடித்த எம்எஸ் பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது ‛பார்க்கிங்' திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை டெல்லி நேஷனல் மீடியா சென்டரில் 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. 2023ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அடிப்படையில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

அதன்படி Feature films பிரிவில் 2023ம் ஆண்டில் தமிழில் வெளியான ‛பார்க்கிங்‛ திரைப்படத்துக்கு மொத்தம் 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் ‛பார்க்கிங்’ பிரச்சனையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. 

‛பார்க்கிங்' திரைப்படத்தை இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். பேஷன் ஸ்டுடியோஸ், சோல்ஜரஸ் பேக்டரி என்ற நிறுவனம் தயாரித்து இருந்தது.

அதேபோல் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‛வாத்தி' திரைப்படத்துக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் குமாருக்கு சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜிவி பிரகாஷ் குமார் ஏற்கனவே ஆடுகளம் திரைப்படத்துக்கு தேசிய விருது வென்றிருந்த நிலையில் இது அவரது 2வது தேசிய விருதாகும்.

மேலும் இயக்குநர் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் Non feature film பிரிவில் தமிழ் ஆவணப்படமான லிட்டில் விங்ஸ் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது வென்றுள்ளது. 

மேலும் 'தி டைம்லெஸ் தமிழ்நாடு' என்ற ஆங்கிலப்படத்துக்கு விருது சிறந்த கலை கலாசார படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset